Local

மேலும் மூன்று அமைச்சர்கள் விரைவில் பதவியேற்பு!

அமைச்சரவையில் மேலும் மூவரை விரைவில் அமைச்சர்களாக இணைக்கப்படவுள்ளனர்.

இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார் என்று அரசியல் தகவல் தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, முன்னாள் அமைச்சர்களான குமார வெல்கம, ராஜித சேனாரத்ன மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் புதிய அமைச்சரவை அமைச்சர்களாகப் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர் என்று குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களான குமார் வெல்கம போக்குவரத்து அமைச்சராகவும், ராஜித சேனாரத்ன சுகாதார அமைச்சராகவும் எதிர்வரும் நாட்களில் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளத் தயாராகவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading