Local

மே தினக்கூட்டத்தை புறக்கணிக்க பங்காளிக்கட்சிகள் தீர்மானம்?

அமைச்சர் விமல்வீரவன்ச தலைமையிலான 11 சிறிய கட்சிகள் பொதுஜன பெரனமுனவின் மே தின பேரணியில் கலந்துகொள்வதில்லை என தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுஜனபெரமுனவின் மே தின கூட்டத்தில் தனியாக மே தினகூட்டத்தை நடத்துவது என 11 கட்சிகளும் தீர்மானித்துள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலசின் வீட்டில் இடம்பெற்ற சந்திப்பில் இது குறித்து தீர்மானிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சர்கள் வாசுதேவநாணயக்கார விமல்வீரவன்ச உதயகம்மன்பில ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
பொதுஜனபெரமுனவில் இடம்பெற்றுள்ள சிறிய கட்சிகள் அதன் மே தினக்கூட்டத்தை தவிர்ப்பது விமல்வீரவன்சவினால் அரசாங்கத்திற்கு ஏற்படும் முதலாவது சவாலாக அமையும் என விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading