Local

மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி!

கொரோனா இரண்டாவது அலை தீவிரப்பட்டுக் கொண்டிருக்கிற நிலையில், இதுவரை 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

தற்போது கொரோனா பரவல் அதிகப்பட்டிருக்கும் போது, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வரும் மே-1 ஆம் தேதி துவங்கி  அவர்களுக்குத் தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே அண்மையில் தான் நாடு முழுக்கத் தடுப்பூசித் திருவிழா நடந்து முடிந்திருக்கிறது. அப்போது பலருக்குப் போதுமான தடுப்பூசி சரிவரக் கிடைக்காத பற்றாக்குறை நீடித்ததைப் பார்க்க முடிந்தது.

தற்போது ரஷ்யாவிலிருந்து தடுப்பூசியை இறக்குமதி செய்யப்பட இருக்கிறது. அத்துடன் மாநிலங்களே நேரடியாக தடுப்பூசிகளை இறக்குமதி செய்து கொள்ளவும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
கொரோனா இரண்டாவது அலை வயது பாரபட்சம் இல்லாமல் அனைவரையும் பாதித்துக் கொண்டிருக்கும் நிலையில், தடுப்பூசி விஷயத்தில் எடுக்கப்பட்டிருக்கிற இந்த முடிவு வரவேற்கத் தகுந்த ஒன்று என்றாலும், தடுப்பூசி பற்றிய சந்தேகங்களுக்கு உரிய விளக்கத்தை அளித்து, முறையான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading