Features

மொட்டை அடிப்பதால் முடி அதிகம் வளருமா?

 

பொதுவாக சிறு பிள்ளைகளிற்கு பெற்றோர்கள் மொட்டை அடிப்பது வழமை. ஒரு கலாசார/ பண்பாட்டு நோக்கம் கருதி இந்த விடயத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்.

ஆனால் மொட்டை அடித்தால் முடி அடர்த்தியாக வளரும் என்பது தவறான மூட நம்பிக்கை.

தலை முடி hair follicles எனப்படும் கலங்களில் இருந்து வளரும். இந்த கலங்கள் தோலிற்கு அடியில் அமைந்து இருக்கும். கண்களிற்கு புலப்படாது. ( ஒரு மரத்தின் வேர் போல கற்பனை செய்யுங்கள்)

நீங்கள் மொட்டை அடிக்கும் போது தோலிற்கு வெளியே உள்ள முடியை வெட்டுவீர்கள் ( மண்ணிற்கு வெளியே தெரியும் மரம் போல )

எனவே இது எந்த விதத்திலும் தலை முடியை உருவாக்கும் கலங்களை (Hair follicles ) பாதிக்காது ( அவை தோலிற்கு அடியே புதைந்து இருக்கும்)

எனவே மொட்டை அடிப்பது தவறு அல்ல. அது ஒரு கலாசார நம்பிக்கை. ஆனால் அது முடி வளர்ச்சியை கூட்டும் என்பது தவறான நம்பிக்கை!

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading