Local

மொனராகலையில் பொலிஸாருடன் ஏற்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழப்பு

மொனராகலை – இத்தேகட்டுவ பகுதியில் பொலிஸாருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தில் சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இத்தேகட்டுவ பகுதியை சேர்ந்த 30 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகநபரை கைது செய்ய சென்ற போது, பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதன்போது, பலத்த காயமடைந்த சந்தேகநபரை மொனராகலை சிரிகல வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கி பிரயோகத்தின் போது சந்தேகநபரால் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் கைக்குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மொனராகலை – மாரவ பகுதியில் கடந்த 31 ஆம் திகதி இடம்பெற்ற கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரே இன்று உயிரிழந்துள்ளார்.

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த குறித்த சந்தேகநபருக்கு எதிராக இரண்டு வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading