World

மொரோக்கோவில் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கு இடமின்றித் தவிக்கும் குடும்பங்கள்!

 

மொரோக்கோவை உலுக்கிய நிலநடுக்கம் இன்னும் பல வாரங்கள் அல்லது மாதங்களுக்கு நில அதிர்வுகள் தொடரும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தில் உயிரிழந்த தங்களது அன்புக்குரியவர்களை அடக்கம் செய்யப் பல குடும்பங்கள் இடம் தேடிவருகின்றனர்.

இந்த நிலையில் இந்த எச்சரிக்கை அவர்களுக்கு மேலும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

6.8 ரிக்டரில் பதிவான நிலநடுக்கத்துக்குப் பிறகு மொரோக்கோவில் இதுவரை 25 தொடர் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதென ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையத்தின் இயக்குநர் ரெமி மோஸு (Remy Mossu) தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கத்தில் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் நீடிக்கின்றன.

மாண்டவர்களை அடக்கம் செய்யப் போதிய இடமின்றி தாங்கள் தவிப்பதாக அங்குள்ள குடியிருப்பாளர்கள் கூறுகின்றனர்.

சிலர் இன்னும் மீட்கப்படாத உடல்களுக்காக முன்கூட்டியே கல்லறைகளைத் தயார் செய்துவைத்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading