Lead News

யானையில் ஒன்றாக சவாரி செய்ய சஜித்திற்கு ரணில் அழைப்பு

ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான யானை சின்னத்தின்கீழ் பொதுத்தேர்தலில் போட்டியிடவருமாறு சஜித் அணிக்கு இறுதிநேர அழைப்பை விடுத்துள்ளார் ரணில் விக்கிரமசிங்க.

ஐ.தே.கவின் சிரேஷ்ட உறுப்பினர்களான மங்கள சமரவீர, மலிக்சமரவிக்கிரம ஆகியோர் இன்று (3) ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது “ஒன்றாய் முன்னோக்கி போவோம். பிளவு வேண்டாம். அது அரசுக்கு வாய்ப்பாக போய் விடும்” என சுட்டிக்காட்டியுள்ளனர். இதற்கு பதிலளிக்கையிலேயே ரணில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மனோ கணேசன் தனது முகநூலில் கீழ்வருமாறு பதிவிட்டுள்ளார்,

” மங்கள, மலிக் ஆகியோர் சற்று முன் ரணிலை சந்தித்து “ஒன்றாய் முன்னோக்கி போவோம். பிளவு வேண்டாம். அது அரசுக்கு வாய்ப்பாக போய் விடும்” என்று கோரினர்.

அதற்கு ரணில், “அப்படியானால், கூட்டணியை கடாசிவிட்டு வாருங்கள். (பழையபடி முதலில் இருந்து ஆரம்பித்து…) ஐ.தே.கட்சியாக யானையில் போட்டியிடுவோம்” என்று கூறியுள்ளார்.

ரணிலின் இந்நிலைபாட்டுக்கு பிரதான துணைவர்கள் ரவி கருணா, வஜிர அபே, அகிலவிராஜ், சாகல ரத்ன ஆகியோர்.

பிரிவினை வேண்டாமே என கடைசி, கடைசியாக முயற்சித்தாலும்கூட இந்த பெரிய மனுஷன் இப்படி சொல்கிறாரே!

என்ன செய்யலாம், சொல்லுங்க?

என்ன செய்யலாம், சொல்லுங்க

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading