Local

யார் இந்த ஒலுகல?

”ஓலுகல சார் நீங்க என்னை கைது செய்ய ஒருநாள் வருவீங்க என்று எனக்கு தெரியும்”

நேபாளில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி கைது செய்யப்படும்போது, “ஓலுகல சார் நீங்க என்னை கைது செய்ய ஒருநாள் வருவீங்க என்று எனக்கு தெரியும்” என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

என்றாவது ஒருநாள் தான் கைது செய்யப்படுவதை நன்கு அறிந்து வைத்திருந்த இஷாரா செவ்வந்தி ரொஹான் ஓலுகல அவர்களின் திறமை தொடர்பில் நன்கு அறிந்து வைத்திருந்துள்ளார்.

யார் இந்த ஓலுகல?

அண்மையில் இந்தோனேசியாவில் இலங்கை பாதாளக் குழு முக்கிய உறுப்பினர்களின் கைதுக்கு பின்னால் உள்ளவரே இந்த ஓலுகல ஆவார்.

இதனையடுத்து மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் ASP-ரொஹான் ஓலுகல விசேட அதிரடிப்படையின் பொறுப்பாளராகவும் பதவி உயர்வு பெற்றார்.

இந்தோனேசியாவில் இருந்து பாதாள உலக பிரபலங்களை கைது செய்து இலங்கைக்கு கொண்டு வந்து தனது பெயரை பதிவு செய்த ஓலுகல வீரதீரச் செயல்கள் புரிந்த வீரர்களின் பட்டியலிலும் இடம்பெற்று அதற்குரிய பதக்கத்தையும் பெற்றார்.

இந்நிலையிலேயே, அவர் இஷாரா செவ்வந்தியைக் கைது செய்துள்ளார்.

அத்தோடு, தனக்கு சொந்தமான இடத்தில் 50 தொன்னுக்கும் அதிகமான ஐஸ் போதைப் பொருள் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மொட்டுக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரியை பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவிற்கு மாற்றுமாறு பொலிஸ் மா அதிபர் அண்மையில் உத்தரவிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading