Local

யாழில் உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் பூட்டு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் அனைத்து திரையரங்குகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்

யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துள்ள நிலையில், தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் திருமண மண்டபங்கள் என்பன இடைநிறுத்தப்பட்டுள்ளன.

எனினும், திரையரங்குகளை மூடவில்லை என தமக்கு பல முறைப்பாடுகள் கிடைத்ததாக வைத்தியர் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையிலேயே, அது தொடர்பில் ஆராய்ந்து, யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளையும் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானித்ததாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளா

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading