யாழில் கண்டுபிடிக்கப்பட்ட அபூர்வ கோழிக் குஞ்சு!

அச்சுவேலி – காலானை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நான்கு கால்களுடன் கோழி ஒன்று குஞ்சு பொரித்துள்ளது.
மகாராஜா கௌரி என்ற குடும்பப் பெண் கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றார்.
கோழி வளர்ப்பினையே அவர் ஜீவனோபாயமாக கொண்டு வருகின்றார்.
இவரது வீட்டில் ஆறு கோழிக் குஞ்சுகள் பொரித்துள்ளது. இந்த நிலையில், அதில் ஒன்று நான்கு கால்களுடன் காணப்படுகின்றது.
ஏனைய கோழிக் குஞ்சுகளைப் போல குறித்த கோழிக் குஞ்சும் சுறுசுறுப்பாக காணப்படுகின்றது.
குறித்த கோழிக்குஞ்சினை பிரதேசத்தில் உள்ள மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
