Local

யாழில் ஜனாதிபதிக்கு கடும் எதிர்ப்பு பொலிஸார் நீர்த்தாரை தாக்குதல்!

ஜனாதிபதியின் யாழ்ப்பாணம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்த போராட்டத்தை அரசடி சந்தியில் வைத்து பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதன்போது அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதுடன் பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

தேசிய தைப்பொங்கல் நிகழ்வு யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading