Local

யாழ்ப்பாணம் உள்ளிட்ட மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்!

யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் மூன்று மாவட்டங்களுக்குட்பட்ட மேலும் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த பகுதி இன்று காலை 6 மணி முதல் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரந்தனை வடமேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், களுத்துறை மாவட்டம் தொடங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட Puhabugoda கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் மலபட தோட்டம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், மாத்தரற மாவட்டம் மாத்தறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உயன்வத்த மற்றும் உயன்வத்த வடக்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இவ்வாறு இன்று முதல் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading