Local

யாழ் பெண் பேஸ்புக்கில் செய்த தில்லுமுல்லு சிக்கி முழிக்கும் முக்கிய புள்ளிகள்!

முகநூல் பாவனையால் பல பெண்கள் மற்றும் ஆண்கள் தமது வாழ்க்கையை சீரழித்து கடைசியில் மனவிரக்தியில் தற்கொலை செய்த சம்பவங்களுக்கு எண்ணிக்கை இல்லை எனலாம்.

பல நல்ல விடயங்களுக்கு பயன்படுத்தப்படும் முகநூல் தற்போது சமூகத்தில் பல தவறுகளையும், தவறான சிந்தனையிலும் இயக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவர் தனது புகைப்படங்களை பிரசுரித்து பல ஆயிரக்கணக்கான ஆண்களின் லைக்குகளை தனது புகைப்படத்திற்கு பெற்று, அதன் மூலம் முகநூலை தவறாக பயன்படுத்த திட்டம் போட்டுள்ளார்.

இதில் சிக்குண்டு பல ஆண்கள் பணமிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன் தான் பெண்ணிய வாதி என்றும் பல பதிவுகளை இட்டு வந்துள்ளார்.

இதனையறிந்து வெளிநாட்டில் உள்ள யாழ்ப்பாணத்து ஆண்கள் பலரும் அவருடன் பேஸ்புக்கின் உள்பெட்டியில் தொடர்பு கொண்டு வந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் அந்த தொடர்புகளை வைத்து வெளிநாட்டில் உள்ள சில குடும்பஸ்தர்களின் பாலியல் பலவீனத்தை பயன்படுத்தி தனது அந்தரங்க புகைப்படங்களை தனது முகம் தெரியாமல் புத்திசாலித் தனமாக அனுப்பியுள்ளார்.

மேலும், அவர்களுடைய அந்தரங்க புகைப்படங்களிலும் வாங்கி, அவற்றை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

அதன் பின்னர் அவர்களை அதனை வைத்து அச்சுறுத்தி பெருமளவு பணம் பெற்றுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்குத் துணையாக அந்த பெண்ணின் நண்பியான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் சட்டத்தரணி ஒருவரும் உதவியாக இருந்துள்ளார் என அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெண்ணுக்கு நிர்வாணமாக உமது அங்கங்களைக் காட்டியதால் சர்வதேச பொலிசாரைக் கொண்டு கைது செய்து இலங்கைக்கு கொண்டுவர முடியும் எனவும் குறித்த பெண் சட்டத்தரணி அவர்களை அச்சுறுத்தியதாகத் தெரியவருகின்றது.
தமது சமூகநிறுவனம் ஒன்றிற்கு பணத்தை வைப்புச் செய்யுங்கள் இல்லாவிட்டால் உங்கள் மீது நடவக்கை பாயும் என அச்சுறுத்தி அந்த நிறுவனத்துக்கு கனடா குடும்பஸ்தர் ஒருவரிடம் 24 லட்சம் ரூபாய்களை பெற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.

வெளிநாட்டில் உள்ளவர்கள் மட்டுமல்லாது யாழ்ப்பாணத்தில் உள்ள சில முக்கிய புள்ளிகளும் குறித்த பெண்ணிடம் மாட்டுப்பட்டு முழிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக ஆராய்ந்த போது குறித்த பெண் உண்மையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் அவர் முக்கிய நிறுவனம் ஒன்றில் முக்கிய வேலையில் இருப்பதாகவும் அவர் 35 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் உள்ள குடும்பப் பெண் என்பதும் தெரியவந்துள்ளது.

இதேவேளை, அவர் கணவனை பிரிந்து வேறு ஒருவனுடன் தொடர்பில் இருந்து வருவதாகவும் அந்தப் பெண்ணுக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றார்கள்.

இவ்வாறு முகநூலில் பணத்திற்காக திட்டமிட்டு இது போன்ற பல சம்பவங்கள் இடம்பெறுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading