Sports

யூரோ கால்பந்து போட்டி குரோஷியாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி!

யூரோ கால்பந்து கோப்பையின் லீக் ஆட்டத்தில் குரூப் D பிரிவில் இங்கிலாந்து மற்றும் குரோஷியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 1 – 0 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி இந்த சீசனின் முதல் போட்டியில் வெற்றியுடன் தொடரை துவங்கியுள்ளது.

இந்த போட்டியில் இரு அணிகளும் கோல் போட இறுதி வரை முயற்சித்து கொண்டிருந்தன. இருப்பினும் இங்கிலாந்து அணியின் ரஹீம் ஸ்டெர்லிங் ஆட்டத்தின் 57வது நிமிடத்தில் பந்தை கோல் போஸ்டுகக்குள் தள்ளினார். போட்டியின் முடிவில் பந்தை 51 சதவிகிதம் பொஸஷன் செய்திருந்தாலும் கோல் அடிக்க தவறியது குரோஷியா.

கடந்த 2018 பிபா உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் குரோஷியாவிடன் 2 – 1 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவி இருந்தது இங்கிலாந்து. இந்த வெற்றி அந்த அணிக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading