Cinema

யோகி பாபுவுடன் இணையும் ஓவியா!

பீஸ்ட்’, ‘வலிமை’ என முன்னணி நடிகர் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துவரும் யோகி பாபு ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நாயகனாக அவர் நடித்த ‘மண்டேலா’ சூப்பர் ஹிட் அடித்தது. அடுத்ததாக, யோகி பாபு நாயகனாக நடித்துள்ள ‘பேய் மாமா’ படம் வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. அதேநாளில், யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் பூஜையும் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை, யோகி பாபுவுடன் இணைந்து நடிக்கும் ஓவியாவே தனது ட்விட்டர் பக்கத்தில் அழைப்பிதழை வெளியிட்டிருக்கிறார். அங்கா மீடியா நிறுவனம் தயாரிக்கும் இப்பட்டத்தில், யோகி பாபுவும் ஓவியாவும் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். செப்டம்பர் 24 ஆம் தேதி நடக்கும் பூஜைக்குப்பிறகுதான் இயக்குநர், படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading