Cinema

ரசிகர்களை வியக்க வைத்த நடிகை த்ரிஷா!

மௌனம் பேசியதே, சாமி, கில்லி, திருப்பாச்சி, ஜி, ஆறு, குருவி, விண்ணைதாண்டி வருவாயா உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் த்ரிஷா. இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் -2 படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் த்ரிஷா உள்ளிட்ட படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் த்ரிஷா நடித்து வருகிறார்.

இந்நிலையில் த்ரிஷா சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் புகைப்படம் லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது. நீல நிற உடையில் த்ரிஷா இருக்கும் புகைப்படத்தை ரசிகர்கள் பகிர்ந்து வர்ணித்து பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading