Sports

ரசிகர்கள் முன்னிலையில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய முகமது ஷமி!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது. இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் இஷாந்த் சர்மா மற்றும் முகமது ஷமி இவர்கள் இருவரும் லேசான காயம் காரணமாக விளையாட முடியாமல் போனது. இவர்களுக்கு பதிலாக தாகூர் மற்றும் உமேஷ் யாதவ் இந்திய அணியில் இடம் பெற்று 4வது டெஸ்ட் போட்டியில் தற்பொழுது விளையாடி வருகின்றனர். 4வது டெஸ்ட் போட்டியை பரபரப்பாக போய்க் கொண்டிருக்கும் நிலையில் நேற்று முகமது ஷமி தனது பிறந்த நாளை இங்கிலாந்தில் ரசிகர்கள் மத்தியில் கேக் வெட்டி கொண்டாடினார்.

இங்கிலாந்து மைதானத்தில் இந்திய ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய பிறந்தநாளை கேக் வெட்டி உற்சாகமாக முகமது ஷமி கொண்டாடினார். அவர் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ சமூக வளைதளத்தில் வைரல் ஆனது. வீடியோவை கண்ட இந்திய ரசிகர்கள் அனைவரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்தனர். லேசான காயத்துடன் அது விரைவில் மீண்டு வந்து 5வது டெஸ்ட் போட்டியில் விளையாடுமாறு ரசிகர்கள் அவரிடம் கேட்டுக் கொண்டனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading