Cinema

ரஜனியின் அண்ணாத்த ரிலீஸ் திகதி வெளியானது!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ’அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பதும் ரஜினிகாந்த்தின் டப்பிங் பணிகள் முடிந்து விட்டதாக கூறப்படும் நிலையில் மற்ற நடிகர் நடிகைகளின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது

இதன்படி ’அண்ணாத்த’ படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என ஏற்கனவே சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால் இடையில் திடீரென ரஜினியின் உடல்நலம், ஊரடங்கு ஆகியவற்றால் படப்பிடிப்பு தடைபட்டதால் திட்டமிட்டபடி தீபாவளிக்கு வெளிவருமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.

மேலும் ,போஸ்டரை வெளியிட்டு அதில் அதிகாரபூர்வ ரிலீஸ் திகதியையும் அறிவித்துள்ளது. நவம்பர் 4 ஆம் திகதி தீபாவளியன்று ’அண்ணாத்த’ திரைப்படம் உறுதியாக ரிலீசாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளதை அடுத்து ரஜினி ரசிகர்களை குஷியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஃபர்ஸ்ட்லுக்கில் ரஜினி ரசிகர்களே எதிர்பார்க்காத வகையில் சூப்பர்ஸ்டார் இளமையாகவும் ஸ்டைலாகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading