Cinema

ரஜனியின் படத்தில் வில்லனாக விக்ரம் நடிக்க 50 கோடி ரூபாய் சம்பளம்!

ரஜினியின் 170வது படமாக உருவாக இருக்கும் திரைப்படத்த்தில் நடிகர் விக்ரம் வில்லனாக நடிப்பதற்கு 50 கோடி செலுத்த லைக்கா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார்.

அந்தப் படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக, புகழ்பெற்ற முன்னணி நாயகர்களில் ஒருவரை இயக்குநர் தேடி வருகிறார். அந்த வரிசையில் அவர் சியான் விக்ரமைத் தேர்வுசெய்துள்ளார். அதுகுறித்து விக்ரமிடம் அவர் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. கதாநாயகனுக்கு நிகரான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க விக்ரமுக்கு ஒரே தடவையாக ரூ.50 கோடி சம்பளம் கொடுப்பதற்கு லைக்கா நிறுவனம் முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால், ரஜினிகாந்துக்கு வில்லனாக நடிக்க விக்ரம் தயங்குவதாகச் சில ஊடகங்களும், படத்தின் தனக்காக கதாபாத்திரம் பிடித்துவிட்டதால், விக்ரம் நடிக்க ஒத்துக்கொண்டு ஐம்பது கோடி ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டார் என்று வேறு சில ஊடகங்களும் தெரிவித்துள்ளன. ஆனால், இதுகுறித்து நடிகர் விக்ரம் எதுவும் கருத்துச் சொல்லவில்லை.

ரஜினிக்கு வில்லனாக விக்ரம் நடிக்கவுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக அது எப்படிப்பட்ட கதாபாத்திரமாக இருந்தாலும் கடினமான உழைப்பை நடிகர் விக்ரம் வெளிப்படுத்துவார் என்பதில் ஐயம் இல்லை.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading