ரணிலுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்காவிட்டால் மேலும் தீவிரமடையலாம்!!
“நான் இப்போதுதான் முன்னாள் ஜனாதிபதியைப் பார்த்தேன். அவருக்கு ஓரளவு நீர்ச்சத்து குறைபாடு இருந்திருக்க வேண்டும், அவரது இரத்தத்தில் சில மாற்றங்கள் மற்றும் பிற அறிகுறிகள் உள்ளன. எனவே, அவரை மூன்று நாட்கள் கடுமையான ஓய்வில் வைத்து, நீர்ச்சத்து குறைபாட்டிற்கு சிகிச்சையளிக்க வேண்டும்.நாம் அவ்வாறு செய்யாவிட்டால், இதயப் பிரச்சினைகள், சிறுநீரகப் பிரச்சினைகள் மற்றும் பிற சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால்தான் அவர் தற்போது பல நிபுணர்கள் குழுவால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறார். இரண்டு அல்லது மூன்று நாட்களில் அவர் குணமடைவார் என்று நாங்கள் நம்புகிறோம். அவர் குணமடையாத போது, அவருக்கு முறையாக சிகிச்சை அளிக்காவிட்டால் அந்த சிக்கல்கள் மேலும் தீவிரம் அடையலாம் என
(கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் Dr ருக்ஷான் பெல்லன) தெரிவித்துள்ளார்.

You must be logged in to post a comment.