Local

ரணில் – பசில் மீண்டும் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவும் இன்று(23) செவ்வாய்க்கிழமை மீண்டும் சந்திக்கவுள்ளனர்.

இந்த சந்திப்பு இன்று மாலை 04.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கமைய சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும் இந்த சந்திப்பு தீர்க்கமானதாகவும் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கு முன்னரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பசில் ராஜபக்சவுக்கும் பல சுற்றுப் பேச்சுக்கள் இடம்பெற்றது. ஆனாலும் அவை இணக்கப்பாடின்றி நிறைவடைந்தன.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடாத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தொடராச்சியாக கூறிவருகின்றார்.

பொதுத் தேர்தலை முதலில் நடாத்தும் தீர்மானத்திலிருந்து பின்வாங்க போவதில்லையெனவும் அவர் வலியுறுத்தி வருகின்றார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஜனாதிபதி தேர்தலே முதலில் நடைபெறும் என தெரிவித்துள்ளார் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலே முதலில் நடாத்தப்பட வேண்டும்.

இவ்வாறிருக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் பொதுத் தேர்தலே முதலில் நடைபெற வேண்டும் தனது நிலைப்பாட்டில் உறுதியாவுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading