Local

ரத்வத்தையுடன் புஷ்பிகாவும் தூக்கு மேடையைப் பார்க்க சென்றார் சட்டத்தரணி தெரிவிப்பு!

வெலிக்கடை சிறைச்சாலைக்கு அமைச்சர் லொஹான் ரத்வத்தையுடன் திருமதி இலங்கை அழகி புஷ்பிகா டி சில்வா சிறைச்சாலைக்குச் சென்றதாக சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலைக்குத் திருமதி இலங்கை அழகி புஷ்பிகா டி சில்வா மற்றும் ஒரு குழுவினரும் சென்றதாகவும் இது தொடர்பான சி.சி.டிவி. கெமராவின் மூலம் எதிர்காலத்தில் உண்மை வெளிவரும் எனவும் சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு அமைப்பின் தலைவர் சட்டத்தரணி சேனக பெரேரா தெரிவித்துள்ளார்.

அரசாங்க நிறுவனத்திற்கு அல்லது ஓர் இடத்திற்குச் செல்லும் போது எவ்வாறு செல்ல வேண்டும் என்ற முறையுள்ளது. அதன்படி செல்ல வேண்டும் என்றும் எங்களின் கலாசாரம் மற்றும் பண்பாட்டிற்கு ஏற்ப செயற்பட வேண்டும் என்றும் ஆனால் அவர்கள் அரை காற்சட்டையுடன்  சமுகமளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாகக் குற்றத் தடுப்பு திணைக்களத்திற்கு அறிவிக்கவுள்ளோம் என்றும் உடனடியாக குறித்த நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading