Local

ரமழான் தலைப் பிறை தென்படவில்லை
நோன்பு புதன்கிழமை ஆரம்பம!

ஹிஜ்ரி 1442ஆம் ஆண்டின் புனித ரமழான் மாதத்திற்கான தலைப் பிறை நாட்டின் எந்தப் பாகத்திலும் இன்று (12) திங்கட்கிழமை மாலை தென்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஷஃபான் மாதத்தை 30 நாட்களாக பூர்த்தி செய்து, புனித ரமழான் முதல் நோன்பை நாளை மறுதினமான புதன்கிழமை (14) ஆரம்பிக்குமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஐம்இய்யத்துல் உலமா மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியன கூட்டாக இணைந்து அறிவித்தன.

புனித ரமழான் மாத தலைப் பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு; இன்று (12) திங்கட்கிழமை மஃரிப் தொழுகையினை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஐம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் உள்ளிட்ட பலவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதன்போதே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading