Cinema

ரம்யாகிருஷ்ணனுக்குப் போட்டியாக வனிதா!

நடிகை வனிதா அட்டகாசமான மேகப்புடன் வெளியிட்டுள்ள புகைப்படத்தினை ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

நடிகை வனிதா சமீபத்தில் மகளின் பிறந்தநாளுக்கு வாயோடு வாய் வைத்து கேக் ஊட்டிவிட்ட புகைப்படம் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியது.

மேலும் இவர் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக இருந்த ரம்யா கிருஷ்ணனுடன் வாக்குவாதம் ஏற்பட்டு பிரபல ரிவியிலிருந்தும் குறித்த நிகழ்ச்சியிலிருந்தும் வெளியேறினார்.

இந்நிலையில் தற்போது கலர்ஸ் சேனலுக்கு மாறியுள்ள வனிதா அதில் நிகழ்ச்சி ஒன்றில் விருந்தினராக கலந்து கொள்ள இருக்கின்றார்.

நிகழ்ச்சியில் நடுவராக இருந்தவரால் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் வெளியேறிய வனிதா, தற்போது மற்றொரு ரிவியில் சிறப்பு விருந்தினராக செல்வது ரம்யாகிருண்னனுக்கு போட்டியாகவே உள்ளது.

இதனை அட்டகாசமான மேக்கப்புடன் புகைப்படத்தினை வெளியிட்டு கூறியுள்ள வனிதாவை, ரசிகர்கள் பலர் அவரது அழகைப் பாராட்டி வருகின்ற நிலையில், சிலரோ ஆண்டி வேற லெவல் என்றும் அங்கே தான் மதுமிதா அக்கா இருக்காங்க என்றும் சிலர் முகம்சுழிக்கும் விதமாக திட்டியும் வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading