Sports

ரவிந்திர ஜடேஜா புதிய சாதனை !!

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்களின் தரவரிசையில் சகலதுறை வீரர்கள் பிரிவில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவிந்திர ஜடேஜா 400 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான சர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய தரவரிசை பட்டியல் வெளியானது.

இதில் சகலதுறை வீரர்கள் பிரிவில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவிந்திர ஜடேஜா முதலிடத்தில் நீடித்துள்ளார்.

இதன் மூலம் இப்பிரிவில் தொடர்ச்சியாக நீண்ட நாட்கள் முதலிடம் பிடித்து ஜடேஜா சாதனை படைத்தார். இதுவரை 1151 நாட்கள் அவர் தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கின்றார்.

இதன்மூலம் தென் ஆப்ரிக்காவின் காலிஸ், இந்தியாவின் கபில்தேவ் சாதனைகளை முறியடித்தார்.

கடந்த 2022, மார்ச் மாதம் வெளியான தரவரிசை பட்டியலில் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜேசன் ஹோல்டரிடம் இருந்து ஜடேஜா முதலிடத்தை கைப்பற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading