Local

ரவி கருணாநாயக்கவின் கைது அரசியல் நாடகம்

தாம் கைது செய்யப்படாமல் இருக்க ரவி கருணாநாயக்க மறைந்திருப்பதில் எவ்வித காரணங்களும் இல்லை என்று சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அரசியலையும் மறைந்திருத்தலையும் ஒரு ஒரே தடவையில் செய்யமுடியாது. எனவே ரவி கருணாநாயக்க வெளியில் வந்து அரசியல் செய்யவேண்டும் அல்லது அரசியலை துறந்து மறைந்திருக்கவேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது கைது நடவடிக்கை நாடகமாக இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ள அவர் ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் ராஜபக்சர்களுடன் தொடர்புகளை கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை பொதுத்தேர்தல் தொடர்பாக கருத்துரைத்த சரத் பொன்சேகா ரவி கருணாநாயக்க நியந்தனையின்றி தந்தால் மாத்திரம் அன்னம் சின்னத்தை ஐக்கிய தேசிய சக்தி பெற்றுக்கொள்ளும் என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading