Local

ரவூப் ஹக்கீமுடன் தொடர்பில் இருந்த 10 உறுப்பினர்கள் தனிமைப்படுத்தலில்!

கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுடன் தொடர்பிலிருந்த 10 உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரென பாராளுமன்ற படைகல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இவர்கள் முதற்தர தொடர்பாளர்கள் என்றும் குறித்த உறுப்பினர்கள் தொடர்பில் தேவையான சுகாதார நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட பிரிவினரால் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, குறித்த 10 உறுப்பினர்களுக்கும் பிசிஆர் பரிசோதனையை முன்னெடுத்து அவர்களை தனிமையிலிருக்குமாறு அறிவித்துள்ளதாக படைகல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading