World

ரஷ்யர்கள் என்னை ஏன் சுட்டார்கள் கையை இழந்த 9 வயது சிறுமி தெரிவிப்பு!

ரஷ்யர்கள் என்னை ஏன் சுட்டார்கள் என்று தெரியவில்லை எனக் கையை இழந்த 9 வயது உக்ரைன் சிறுமி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் ரஷ்யத் தாக்குதலில்  9 வயது உக்ரைன் சிறுமி சாஷா தனது கையை இழந்துள்ளார்.

இது குறித்து அந்த சிறுமி, ரஷ்யர்கள் தன்னை ஏன் சுட்டார்கள் என்று தெரியவில்லை எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர்,  “இது ஒரு விபத்து. அவர்கள் என்னைக் காயப்படுத்த நினைக்கவில்லை என்று நான் நம்புகிறேன்,” எனவும் தெரிவித்துள்ளார்.

அவர்கள் கெய்வ் புறநகர்ப் பகுதியிலிருந்து தப்பிச் செல்லும்போது ரஷ்யத் துருப்புக்கள் அவர்களின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சாஷாவின் தந்தை கொல்லப்பட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading