World

ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் மையத்தில் தாக்குதல்:

ரஷ்யாவின் வடமேற்கில் உள்ள பிரிமோர்ஸ்க் துறைமுகத்தின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.

பிரிமோர்ஸ்க் துறைமுகம்

வடமேற்கு ரஷ்யாவில் உள்ள பிரிமோர்ஸ்க் துறைமுகம், நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் மையங்களில் ஒன்றாகும்.

ukraine strike on russia oil reservoirs

இது நாளொன்றுக்கு 10 லட்சம் பீப்பாய்களுக்கும் அதிகமான கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்யும் திறன் கொண்டது.

  • லெனின்கிராட் பிராந்திய ஆளுநர் அலெக்ஸாண்டர் ட்ரோஸ்டென்கோ, அந்தத் துறைமுகத்தில் தாக்குதலுக்குப் பிறகு தீப்பிடித்ததாக கூறினார்.

70க்கும் மேற்பட்ட உக்ரேனிய ட்ரோன்கள்

மேலும் அவர், தீயணைப்பு வீரர்கள் துறைமுகத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும், அவசரகால மீட்புப் பணிகளுக்கு இடையில் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் பிராந்தியத்தின் வான்வெளியில் 70க்கும் மேற்பட்ட உக்ரேனிய ட்ரோன்களை வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்ததாகவும் கூறினார்.

இதற்கு முன் கடந்த செப்டம்பர் மாதத்திலும் பிரிமோர்ஸ்க் துறைமுகத்தை உக்ரைன் தாக்கி, எண்ணெய் ஏற்றும் பணியை தடைசெய்தது குறிப்பிடத்தக்கது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading