World

ரஷ்ய ஆயுத கிடங்கை தவிடுபொடியாக்கிய உக்ரைன்!

ரஷ்ய ஆயுத கிடங்கை உக்ரைன் படைகள் தாக்கி அழித்த காணொளி வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது தொடர்ந்து 68வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, அந்நாட்டு கார்கிவ் நகரம் மீது சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், உக்ரைனின் 30வது படைப்பிரிவு, மோர்ட்டர் குண்டுகள் மூலம் ரஷ்ய ஆயுத கிடங்கை தாக்கி அழித்துள்ளன.

வீடியோவில், உக்ரைன் மோர்ட்டர் தாக்குதலில் ஆயுத கிடங்கு பயங்கரமாக வெடித்து சிதறும் காணொளி வெளியாகியுள்ளது.

ஆனால், எந்த பகுதியிலிருந்த ரஷ்ய ஆயுத கிடங்கு தாக்கி அழிக்கப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை.

முன்னதாக ஸ்னேக் தீவுக்கு அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட 2 ரஷ்ய படகுகளை ட்ரோன் மூலம் உக்ரைன் படைகள் தாக்கி அழித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading