World

ரஷ்ய படைகள் நுழைவதை தடுக்க பாலத்தை தகர்த்தி தன்னைத் தானே அழித்துக் கொண்ட உக்ரைன் வீரர்!

உக்ரைனுக்குள் ரஷ்ய படைகள் நுழைவதை தடுக்க உக்ரைன் ராணுவ வீரர் ஒருவர் தன்னைத் தானே வெடிக்கச் செய்து பாலத்தை தகர்த்தியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதலை 3ஆவது நாளாக நடத்தி வருகிறது.

இந்நிலையில், உக்ரைன் ராணுவ வீரரான விட்டலி ஸ்காகுன் வோலோடிமிரோவிச் என்பவர் கிரிமியா மற்றும் உக்ரைன் நிலப்பரப்பை இணைக்கும் முக்கிய இடமான பாலம் அருகே ரஷ்ய படைகள் நுழைந்து வருவதை கண்டு அங்கு வெடி குண்டுகளை வைத்து தன்னைத் தானே வெடிக்கச் செய்து பாலத்தை தகர்த்தியுள்ளார்.

உக்ரைன் வீரரின் செயலால் ரஷ்யர்கள் நுழைவதை பின்தங்க வைத்ததாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading