Local

ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு!

இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான புதிய அமைச்சரவையில், ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அமைச்சர்களாகியுள்ளனர்.
புதிய நியமனத்திபடி, பாதுகாப்பு அமைச்சர் பதவியை ஜனாதிபதி கோட்டாபய தன்வசம் வைத்துக் கொண்டுள்ளார். அமைச்சுப்பொறுப்பில் மஹிந்த ராஜபக்ச நாமல் ராஜபக்ச (மஹிந்தவின் மகன்), சமல் ராஜபக்ஷ (மஹிந்தவின் சகோதரர்), சசிந்திர ராஜபக்ச (சமல் ராஜபக்ஷவின் மகன் – ராஜாங்க அமைச்சர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவைதவிர, மஹிந்த ராஜபக்சவின் சகோதரியின் மகன் நிபுண ரணவக்க (நாடாளுமன்ற உறுப்பினர்) இன்று மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் அரசியலமைப்பின்படி (19ஆவது திருத்தம்) ஜனாதிபதியொருவர் எந்தவொரு அமைச்சுப் பதவிகளையும் தன்வசம் வைத்திருக்க முடியாது.ஆனால், அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் மேற்கொண்ட ஜனாதிபதி என்கிற வகையில், முன்னைாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சுப் பதவிகளை வைத்திருக்க அரசியலமைப்பின் மூலம் அனுமதிக்கப்பட்டார். அவ்வாறான நிலையில், இன்று பாதுகாப்பு அமைச்சினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தன்வசம் வைத்துக் கொண்டு பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இந்த செயல்பாடு, அரசியலமைப்புக்கு முரணான விடயம் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading