Local

ராஜபக்ச குடும்பம் வெளிநாடு செல்வதை தடுக்க விமான நிலையம் மக்களால் முற்றுகை!

ரத்மலானை விமான நிலையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அரசாங்க உறுப்பினர் அல்லது ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேற முயற்சி செய்கின்றனரா என்பதை அவதானிக்க அவர்கள் அங்கு கூடியுள்ளனர்.

இதற்காக காலி வீதியின் ஊடாக வரும் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டு குறித்த குழுவினரால் சோதனை செய்யப்பட்டு வருகின்றது.

ராஜபக்ஷ ஆதரவான உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் விமான நிலையத்தை பயன்படுத்தலாம் என வட்சப்பில் செய்திகள் வெளியாகிய நிலையில் அவர்கள் இவ்வாறு குவிந்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading