ரிஷாதின் மனைவி உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் மனைவி உள்ளிட்ட நால்வரினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி , நான்கு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் இன்று (09) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் புரிந்த ஹிஷாலினி, மர்மமான முறையில் தீ காயங்களுடன் கடந்த மாதம் மூன்றாம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த மாதம் 15ம் திகதி உயிரிழந்திருந்தார்.
அந்த சம்பவம் தொடர்பில் ரிஷாட் பதியூதீனின் மனைவி, மனைவியின் தந்தை மற்றும் இடைதரகர் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதன்பின்னர் , ரிஷாட் பதியூதீனின் வீட்டில் இடம்பெற்றதாக கூறப்படும் யுவதியொருவரின் பாலியல் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில், ரிஷாட் பதியூதீனின் மனைவியின் சகோதரன் கைது செய்யப்பட்டிருந்தார்.
மேலும் ,இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததுடன், அவர்களுக்கான விளக்கமறியல் உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
