Cinema

ரீமேக்காகும் ‘காசேதான் கடவுளடா’!

1972-ல் ஏவிஎம் தயாரித்த காமெடி திரைப்படம் ‘சாசேதான் கடவுளடா’. முத்துராமன் நடித்த இந்தப் படத்தின் ரீமேக்கை ஆர்.கண்ணன் இயக்குவதாகக் கூறப்படுகிறது.

ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள ‘தள்ளிப் போகாதே’, சந்தனம் நடித்திருக்கும் ‘பிஸ்கோத்து’ ஆகிய படங்கள் வெளியாக உள்ளநிலையில், அதோடு ‘எரியும் கண்ணாடி’ என்ற படத்தையும் ஆர்.கண்ணன் இயக்கியுள்ளார்.

அடுத்து மிர்ச்சி சிவா, யோகி பாபு நடிப்பில் ஒரு படத்தை ஆர்.கண்ணன் இயக்க திட்டமிட்டுள்ளார். இந்தப் படம் ஏவிஎம்மின் ‘காசேதான் கடவுளடா’வின் ரீமேக் எனக் கூறப்படுகிறது.

காசேதான் கடவுளடா படம் 1972-ல் வெளியானது. பணத்தேவை மிகுந்த சிலர் மனோரமாவிடமிருந்து அந்தப் பணத்தைத் திருடப் பார்க்கிறார்கள் சிலர். அதில் ஒருவர் எஸ்.பி.முத்துராமன். இவரது தந்தையின் இரண்டாவது மனைவி தான் மனோரமா.

முத்துராமன் தனது ஒன்று விட்ட சகோதரன் ஸ்ரீகாந்தின் உதவியுடன் திருட்டை செயல்படுத்துகிறார். நடுவில் போலிச் சாமியார் தேங்காய் சீனிவானின் அட்டகாசங்களும் உண்டு. ரசிகர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைத்த க்ரைம் காமெடிப் படம் இது.

இதை இந்தக் காலத்துக்கு ஏற்றபடி ஆர்.கண்ணன் ரீமேக் செய்வதாக கூறப்படுகிறது. முத்துராமன் வேடத்தில் மிர்ச்சி சிவாவும், தேங்காய் சீனிவாசன் வேடத்தில் யோகி பாபுவும் நடிக்கயிருப்பதாக தெரிய வந்துள்ளது.

காசேதான் கடவுளடா படத்தை சித்ராலயா கோபு இயக்கியிருந்தார். இவர் முதலில் இதை நாடகமாகத்தான் எழுதினார். முத்துராமன், மனோரமா என பலரும் அதில் நடித்திருந்தனர்.

நாடகம் வெற்றிகரமாக ஓடவே ஏவிஎம் அதனை படமாக்கியது. சித்ராலயா கோபுவே படத்தை இயக்கினார். நாடகத்தில் முத்துராமன், மனோரமா நடித்த வேடங்களை திரைப்படத்திலும் அவர்களே செய்தனர்.

காசேதான் கடவுளடா ஒரு கிளாஸிக் காமெடி. ரீமேக் அதன் புகழுக்கு பங்கம் செய்யாமலிருக்க வேண்டும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading