World

ரூபா 10 கோடி ரூபாவுக்கு விற்பனையான மீன்!

ஜப்பானின் பாரம்பரிய புதுவருட மீன் ஏலவிற்பனையில், 273,000 அமெரிக்க டொலர்களுக்கு மீன் ஒன்று ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தலைநகர் டோக்கியோவிலுள்ள டோயோசு (Toyosu) மீன் சந்தையில் புத்தாண்டு பிறந்தவுடன் நடைபெறும் ஏல விற்பனையில் பெருந்தொகை விலைக்கு மீன் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகி்ன்றது.

இதன்போது 212 கிலோகிராம் எடையுடைய புளூபின் டூனா (Bluefin tuna / புளூபின் ரூனா) ஒரு மீன் 36.04 மில்லியன் ஜப்பானிய யென்களுக்கு (273,000 அமெரிக்க டொலர்கள், சுமார் 10 கோடி இலங்கை ரூபா, 2.25 கோடி இந்திய ரூபா) விற்பனை செய்யப்பட்டது.

2019 ஆம் ஆண்டு 278 கிலோகிராம் எடையுடைய புளூபின் டூனா ரக மீன் 336.1 மில்லியன் யென்களுக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

இருப்பினும் கடந்த வருடம் அதிகபட்சமாக 16.88 மில்லியன் யென்களுக்கே மீனொன்று விற்பனை செய்யப்பட்டமை இதுவே முதல் தடவை என்பது  குறிப்பிடத்தக்கது..

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading