ரோஜா பூவில் அடங்கி உள்ள மருத்துவ குணங்கள்!

ரோஜா மன அழுத்தத்தை
குறைகக்கூடியது. வீக்கத்தை வற்றச்செய்யும் தன்மை வாய்ந்தது. நுண் கிருமிகளை ஒழிக்கவல்லது. புண்களை ஆற்றக்கூடியது. குருதியைப் பெருக்குவது. ஜீரண சக்தியைத்
தூண்டக்கூடியது. சளியை அகற்றக்கூடியது.
தொண்டைப்புண்,
தொண்டைக்கட்டு, மூக்கில் நீர்
ஒழுகுதல், சுவாசப்பாதை அடைப்பு ஆகியவற்றை ரோஜா
குணமாக்கும். நுரையீரல் மற்றும் இதயத்தில்
கிருமித்தாக்கத்தால் ஆளாகி
துன்பப்படுபவர்களுக்கு நல்ல
தீர்வாக ரோஜா அமைகிறது.
ரோஜாவை தேநீராகக் காய்ச்சிக் குடிப்பதால் ஜீரணப்பாதையில் ஏற்பட்ட தொற்றுக் கிருமிகள்
அழிக்கப்பட்டு நம் உடலுக்குத்தேவையான
நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உருவாகும்.உடலில் சேர்ந்த
தேவையற்ற நீரை வெளித்தள்ள சிறுநீரகத்துக்கு உதவிசெய்கிறது ரோஜா.
ரோஜா இதழ்களைத் தேநீராகக் காய்ச்சிக் குடிப்பதால் கருப்பைப்கோளாறுகள் சரியாவதுடன் மாதவிடாய்க் காலத்தில் அதிகமான
வலி, அதிகமான ரத்தப்போக்கு
ஆகியவற்றிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
