Local

ரோஹித ராஜபக்க்ஷவின் வீட்டு மதிப்பு 30 கோடி ரூபா?

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ச தற்போது வசிக்கும் வீடு சுமார் ரூ .30 கோடி மதிப்புடையது என்று சமகி மஹரகம நகராட்சி கவுன்சிலர் தனுஷ்க ராமநாயக்க இணையத்தில் வீடியொன்றை வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்படி ,எவ்வாறாயினும் குறித்த வீடு ரோஹித ராஜபக்சக்ஷவுக்கு சொந்தமானதா அல்லது அவரது பெயரில் இருக்கின்றதா என்பது தனக்குத் தெரியாது என்றும், தற்போது அவர் அந்த வீட்டில் வசித்து வருவது மட்டுமே சொல்ல முடியும் என்று தெரிவித்தார்.

ரோஹித ராஜபக்க்ஷ தனது பிறந்த நாளை கொண்டாட அவ்வீட்டில் ஒன்று கூடியிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இது குறித்து நாங்கள் ரோஹித ராஜபக்க்ஷவிடம் வினவிய போதிலும், அவர் இதுவரை பதிலளிக்கவில்லை என்று தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading