Cinema

லதா மங்கேஷ்கருக்கு மனம் உருக துவா செய்த நடிகர் ஷாருக்கான்!

மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் உடலுக்கு நடிகர் ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கெளரி கான் அஞ்சலி செலுத்திய போட்டோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இந்த போட்டோவை அதிகமானவர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் தனது 92 வது வயதில்  காலமானார். கொரோனா தொற்றால் மருத்துவமனையில் 28 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இரண்டு வாரங்களுக்கும் மேலாக ஐசியு.,வில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்ட லதா மங்கேஷ்கர், கொரோனாவில் இருந்து மீண்ட பிறகு வைரஸ் பாதிப்பின் காரணமாக உடலின் பல உறுப்புக்கள் செயலிழந்ததாக டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
அவரது மறைவிற்கு தலைவர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர். பிரதமர், மகாராஷ்டிர முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். முழு அரசு மரியாதையுடன் லதா மங்கேஷ்கரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பாலிவுட் பிரபலங்கள் அஞ்சலி
மும்பை சிவாஜி பார்க்கில் லதா மங்கேஷ்கரின் இறுதி சடங்குகள் நேற்று நடைபெற்றது. லதா மங்கேஷ்கரின் உடலுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். பாலிவுட் பிரபலங்களான ஷாருக்கான், அமீர்கான், ரன்வீர் கபூர் உள்ளிட்ட ஏராளமானோர் நேரில் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்.

துவா செய்த ஷாருக், வணங்கிய பூஜா
ஷாருக்கானும், அவரது மேனேஜர் பூஜா தத்லானி இருவரும் லதா மங்கேஷ்கரின் உடல் அருகே சென்று அஞ்சலி செலுத்தினர். அப்போது ஷாருக்கான் இஸ்லாமிய முறைப்படி துவா ஓதினார். அதே சமயம் அருகில் இருந்த பூஜா இந்து என்பதால், அவர் கைகளை கூப்பி வணங்கினார். இந்த போட்டோ தற்போது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

ட்விட்டரில் கொண்டாடும் ரசிகர்கள்
இது தான் இந்தியா. இந்தியாவின் ஒற்றுமை. மத நல்லிணக்கம். மதங்களை கடந்த மரியாதை என பலரும் புகழ்ந்து வருகின்றனர். குஷ்பு உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் இந்த போட்டோவை ட்விட்டரில் பகிர்ந்து, இந்தியாவின் பெருமை என புகழ்ந்து வருகின்றனர். #Shahrukhkhan, #Gowrikhan போன்ற ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் டிரெண்டிங் ஆக்கப்பட்டுள்ளன

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading