Local

லிட்ரோ எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்தியது!

மறுஅறிவித்தல் வரை எரிவாயு விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

நேற்று (02) முதல் மறு அறிவித்தல் வரை இவ்வாறு எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்தியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இது தொடர்பில் லாஃப்ஸ் கேஸ் நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ. கே. வேகபிடிய கருத்து தெரிவித்த போது, ​​நுகர்வோர் விவகார அதிகார சபையோ அல்லது அமைச்சோ அவ்வாறான எந்த அறிவித்தலையும் தமது நிறுவனத்திற்கு வழங்கவில்லையெனத் தெரிவித்தார்.

எனவே, தமது நிறுவனத்தின் எரிவாயு விநியோக நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நாடு முழுவதும் பரவலாக எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading