Local

இலங்கையில் சூறாவளி விருத்தியடையக்கூடிய சாத்தியம்!

சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.வடக்கு மாகாணத்தில் காலை வேளையிலும் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.மேல், ஊவா, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலை கொண்டுள்ளது. அது அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு சூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.ஆழம் கூடிய மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.மழை நிலைமை : காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் இரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது பிரதானமாக வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.கடல் நிலை : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண அலையுடன் காணப்படும்.இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்அனுராதபுரம் – பிரதானமாக சீரான வானிலை மட்டக்களப்பு – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்கொழும்பு – பிரதானமாக சீரான வானிலைகாலி – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்யாழ்ப்பாணம் – சிறிதளவில் மழை பெய்யும்கண்டி – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்நுவரெலியா – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்இரத்தினபுரி – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்திருகோணமலை – பிரதானமாக சீரான வானிலைமன்னார் – சிறிதளவில் மழை பெய்யும்(வளிமண்டலவியல் திணைக்களம்)

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading