லிட்ரோ சமையல் எரிவாயு புதிய விலை அறிவிப்பு!

லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்ட நிலையில் புதிய விலைகள் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 271 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 4280 ரூபாவாக நிர்ணயிக்கப்படடுள்ளது.
அத்துடன், 5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு கொள்கலன் விலை 107 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 1720 ரூபாவாகும்.
மேலும் லிட்ரோ 2.3 கிலோ லிட்ரோ எரிவாயு கொள்கலனின் விலை 48 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 800 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
