Cinema

லொஸ்லியாவும் நானும் நெருக்கமாக நடித்தது உண்மைதான் தர்ஷன் தெரிவிப்பு!

இலங்கை தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பின் சென்னை வந்து பிக்பாஸ் வாய்ப்பினை பெற்று பிரபலமானவர் லொஸ்லியா. பிக்பாஸ் 4 சீசனில் கலந்து கொண்டு அனைவருடன் சகஜமாக பழகிய லொஸ்லியா கவின் மீது ஏற்பட்டு தன் அப்பாவின் வெறுப்பை சந்தித்தார். இதையடுத்து நிகழ்ச்சி பிறகு தன் குடும்பம் தான் முக்கியம் என்று தந்தை மரணத்திற்கு பிறகு கடுமையாக உழைக்க திட்டமிட்டார்.

பின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் சதீஷ் நடிக்கும் பிரண்ட்ஷிப் படத்தில் நடித்தார். இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக பேட்டியும் கொடுத்து வருகிறார். இதையடுத்து பிக்பாஸ் தர்ஷனுடன் கூகுள் குட்டப்பன் படத்தில் நடித்துள்ளார். படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. தர்ஷனுடன் நெருக்கமாக படுக்கை அறை காட்சியில் நடித்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது ரசிகர்களுக்கு.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அண்ணன் தங்கையாக கூறி இப்படி நடித்திருக்கிறீர்களே என்ற விமர்சனமும் எழுந்தது. அந்த காட்சிகளில் நடித்ததை பற்றி கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் லொஸ்லியா. தர்ஷன் எனக்கு அண்ணன் மாதிரி. படத்தில் அப்படியான காட்சிகள் வெறும் நடிப்பிற்காகத்தான் நடித்தோம். இது வெறும் நடிப்புமட்டுமே, அதை யாரும் சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

படத்தை படமாக பாருங்கள் நிஜவாழ்க்கைக்கு ஒப்பிடாதீர்கள் என்றும், அந்தக்காட்சிகள் படமாக்கப்பட்டபோது நாங்கள் இருவரும் சிரித்து கொண்டே செம ஜாலியாக தான் எடுத்து கொடுத்து முடித்தோம் என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading