CinemaWorld

வசூல் சாதனைப் படைத்த அவதார் 2

அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.7,000 கோடியை வசூலித்துள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ.300 கோடிக்கும் அதிகமான வசூல் சாதனை புரிந்துள்ளது.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியாகி, உலகெங்கும் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்த படம் ‘அவதார்’. இரண்டு மணிநேரம் 40 நிமிடங்கள் நம்மை வேறு உலகுக்கு அழைத்து சென்றிருந்தது இத்திரைப்படம். ரூ.1000 கோடி செலவில் உருவான இப்படம் உலகம் முழுவதும் ரூ.280 கோடி அமெரிக்க டாலர்களை வசூலித்தது. அதுவரை வேறு எந்தத் திரைப்படமும் நிகழ்த்த முடியாத வசூல் சாதனையை இத்திரைப்படம் நிகழ்த்தியது.

கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த டிச.16-ல் வெளியானது. முதல் பாகத்தைப்போல மிகச் சிறப்பான காட்சி அனுபவத்துடன் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதும் 160 மொழிகளில் 52 ஆயிரம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. படம் வெளியாகி 3 நாட்களில் இந்திய அளவில் ரூ.160 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதுடன், உலகம் முழுவதும் ரூ.3,500 கோடியை வசூலித்து மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது படம் வெளியாகி 10 நாட்கள் ஆன நிலையில், இந்திய அளவில் மட்டும் படம் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. உலகம் முழுவதும் ரூ.7 ஆயிரம் கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது. கிட்டத்தட்ட ரூ.3 ஆயிரம் கோடியில் உருவான இப்படம் அதன் பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு லாபம் வசூலித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading