Local

வடக்கு கிழக்கில் வேறு சின்னத்தில் களமிறங்குகிறது பொதுஜன பெரமுன

வடக்கு- கிழக்கில் வேறு சின்னத்தில் களமிறங்குகிறது பொதுஜன பெரமுன!
நாட்டில் அடுத்து நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் வடக்கு- கிழக்கில் வேறு சின்னத்தில் களமிறகுவதற்கு இலங்கை சுதந்திர மக்கள் கூட்டணி ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இலங்கை சுதந்திர மக்கள் கூட்டணி, எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஒவ்வொரு மாவட்டத்திலும்  போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பான  பட்டியலை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் இலங்கை சுதந்திர மக்கள் கூட்டணி சார்பாக பொதுத்தேர்தலில் போட்டியிடும் உறுப்பினர்களின் நியமனம் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் குறித்த முன்னணியுடன் இணைந்த பிற அரசியல் கட்சிகளும் தனித்தனியாக வேட்பு மனுக்களைத் தயாரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின்போது முக்கியமாக மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் வன்னி ஆகிய மாவட்டங்களில் அதிக வாக்குகளை பெற்றுக்கொள்வது தொடர்பாக இலங்கை சுதந்திர மக்கள் கூட்டணி அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது.
குறிப்பாக வடக்கு- கிழக்கில் வேறு சின்னத்தில் களமிறங்குவது தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும் அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading