Cinema

வருங்கால கணவருடன் காரில் சென்ற பிரபல நடிகை உயிரிழப்பு!

இந்தி சினிமா துறையில் பிரபலமான தொலைக்காட்சி தொடரில் நடித்து, அனைவராலும் அறியப்பட்ட நடிகை கார் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை

இந்தி சினிமா துறையில் வெளியான சாராபாய் விசிஸ் சாராபாய் என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம், பிரபலமாக அறியப்பட்டவர் நடிகை வைபவி உபத்யா(30) .

இவர் தனது தனது வருங்கால கணவருடன் கடந்த திங்கட்கிழமை, காரில் இமாச்சல பிரதேசத்தின் குலு மாவட்டத்திற்கு சென்று கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது இமாச்சல பிரதேசத்தின் பஞ்சர் என்ற பகுதியிலுள்ள மலைப்பிரதேசத்தில், கார் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேடு பள்ளமாய் இருந்த சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

நடிகை உயிரிழப்பு

திடீரென ஏற்பட்ட இந்த விபத்தால் நடிகை வைபவி காரிலிருந்து வெளியேற முயன்றுள்ளார். ஆனால், விபத்தில் அவரது தலையில் ஏற்பட்ட பலமான காயத்தால் வைபவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

வைபவியுடன் காரில் சென்ற அவரது வருங்கால கணவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் கூடுதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் ஆதித்யா சிங் ராஜ்புத் அப்பாட்மெண்டில், உயிரிழந்த சம்பவம் நடைபெற்றதை தொடர்ந்து, வைபவியின் மரணம் இந்தி சினிமா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வைபவி பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனே நடித்த ‘சப்பாக்’ என்ற படத்திலும், ‘த்மிர்’ என்ற படத்திலும், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading