Cinema

வருங்கால மனைவியுடன் இப்படிதான் இருப்பேன் சிம்பு தெரிவிப்பு!

நடிகர் சிம்பு முதல் முறையாக தனது வருங்கால மனைவியிடம் எப்படி நடந்து கொள்வேன் குறித்து பேசியுள்ளது இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. திரையில் நாயகனாக அறிமுகமான சிறுது காலத்திலேயே இயக்குனர் அவதாரம் எடுத்த சிம்பு மன்மதன், வல்லவன், வாலிபன் போன்ற படங்களை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

பின்னர் தொடர் வெற்றிகளை குவித்து வந்த சிம்பு பீப் பாடல் சர்ச்சை, தயாரிப்பளாருடன் பிரச்சனை போன்றவை ஏற்பட்டதால் அவர் நடித்த படங்கள் வெளியே வருவதற்கு சிக்கலை சந்தித்தது.

இதனால் ஒரிரு ஆண்டுகள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். தற்போது இவர் நடித்து வெளியான மாநாடு திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. பல்வேறு சர்ச்சைகளை தாண்டி தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் சிம்பு வருக்கால மனைவி குறித்து ஓபனாக பேசியுள்ளார். அதாவது என்னை நம்பி வருபவளுக்கு ஆறுதலாக, துணையாக, உதவியாக இருப்பேன் என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் சின்ன சின்ன சண்டைகள் போட்டு உடனே எந்தவித ஈகோவும் இல்லாமல் சேர்ந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading