World

வரைபடத்தில் இருந்து இஸ்ரேலின் பெயரை நீக்கியது சீனா!

சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான அலிபாபா மற்றும் பைடு தங்களின் இணைய வரைபடத்தில் இருந்து இஸ்ரேலின் பெயரை நீக்கியுள்ளன.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவான சீனாவின் நிலைப்பாட்டை ஆதரிக்கும் வகையில் சீன நிறுவங்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

சீனாவின் சமூக ஊடகங்களில் யூத எதிர்ப்பு வலுவாக பேசப்பட்டு வருகிறது. ஜெர்மனி, யூதர்களுக்கு என்ன செய்ததோ அதையே இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கு செய்து வருகிறது என சீனாவின் பயனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், பைடுவின் சீன மொழியில் உள்ள இணைய வரைபடத்தில் சர்வதேச நிர்ணயிக்கப்பட்ட அளவீடுகளின்படி இஸ்ரேலின் எல்லைகள் குறிக்கப்பட்டிருந்தாலும் அந்தப் பகுதியில் இஸ்ரேல் என்கிற பெயர் குறிப்பிடப்படவில்லை.

லக்ஸம்பெர்க் உள்ளிட்ட சிறிய பகுதிகளுக்கே தெளிவான பெயர் குறிப்பு இருக்கும்போது இஸ்ரேல் பெயர் இல்லை என்பது இஸ்ரேல்-பாலஸ்தீன போரின் விளைவாகத் தான் என்பதை அறிய முடிகிறது.

இது குறித்து அலிபாபா மற்றும் பைடு நிறுவனங்கள் இதுவரை எந்த பதிலும் வெளியிடவில்லை.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading