Local

வறுமை காரணமாக பிள்ளைகளுக்கு நஞ்சு கொடுத்து கொல்ல முயன்ற தாய்!

தாய் ஒருவர் தானும் நஞ்சுண்டு தந்து மூன்று குழந்தைகளுக்கும் நஞ்சு கொடுத்து கொள்ள முயன்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இச் சம்பவம் வலப்பனை மத்துரட்ட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எலமுள்ள, மாரதுவெல என்ற இடத்தில் இடம் பெற்றுள்ளது.

25 வயதை கொண்ட இளம் தாய் ஒருவரே இச் செயலை செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

தனது மூன்று பிள்ளைகளுக்கு நஞ்சு ஊட்டியதுடன் தானும் நஞ்சுருந்து உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்துள்ளார்.

இச்சம்பவம் இம்மாதம் 12ம் திகதி இடம்பெற்றுள்ளதாக மதுரட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அறிந்த அயலவர்கள் உடனடியாக தாய் மற்றும் பிள்ளைகள் மூவரையும் காப்பாற்றியதுடன் 119 அவசர பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு குறித்த தாயை சிகிச்சையின் பின் கைது செய்துள்ளனர்.

தனது கணவர் தன்னையும் பிள்ளைகளையும் கவனிப்பதில்லை உண்ணுவதற்கு உணவு பொருட்கள் பெற்று தருவதில்லை பிள்ளைகள் பாடசாலை அனுப்ப உபகரணங்கள் பெற்று தருவதில்லை, இதனால் தொடர்ந்து பட்டினி சாவை எதிர் கொள்கின்றோம்.

இதனாலேயே நஞ்சரிந்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றதாக அவ்விழந்தாய் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

6 , 5 மற்றும் ஒரு வயது குழந்தைகளுக்கே குறித்த தாய் நஞ்சு கொடுத்துள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தாய் மற்றும் பிள்ளைகளை வலப்பனை நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading