Cinema

வலிமை வசூல் ரூபா 200 கோடி வெளியான பரபரப்பு தகவல்!


போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் ஆக்க்ஷன் மற்றும் பாசம் கலந்து அசத்தலாக வெளியான படம் தான் “வலிமை”.. இப்படம் பிப்ரவரி 24 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியானது.

ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு படம் இல்லை என சமூக ஊடங்களில் செய்திகள் வெளியானது.. மேலும் படத்தின் பிற்பகுதி மிகவும் மெதுவாக செல்வதாவும், போர் அடிப்பதாகவும் எதிர்மறை கருத்து வெளியானது. நீண்ட நேரம் சண்டை காட்சிகள் என படத்தை செல்வதாகவும்,  கிட்டத்தட்ட 3 மணி நேரம் படம் இருப்பதால் சலிப்பு ஏற்படுவதாக கூறப்பட்டது. இதனால் 14 நிமிட காட்சிகளை படக்குழு குறைத்துள்ளது.

இந்நிலையில், வலிமை படத்தின் 5 நாள் வசூல் 100 கோடியை தாண்டியது என தகவல் வந்தது. தற்போது 9 நாள் வசூலாக 200 கோடி ரூபாய் நெருங்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வலிமை திரைப்படம் இதுவரை 197 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாவும்.. இன்னும் ஓரிரு நாட்களில் 200 கோடி ரூபாய் தாண்டிவிடும் என கூறப்படுகிறது.

ஆனால், இதுவரை படத்தின் வசூல் எவ்வளவு என வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் மெளனம் காத்து வருகிறார்.சமீபத்தில் வெளியான புஷ்பா, மாநாடு உள்ளிட்ட படங்களில் வசூலை அதன் தயாரிப்பாளர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்த நிலையில், போனி கபூரும் வலிமை திரைப்படத்தின் வசூலை அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading